Thursday, June 16, 2011
மனிதம் மரணித்துவிட்டது !
அண்டை வீட்டுக்காரர் ஒருவர் இரண்டு நாட்கள் முன்பு குடித்துவிட்டு வண்டி ஓட்டி எதிரில் வந்த பெண்ணின் காலையும் உடைத்து புளியமரத்தில் மோதி கீழே விழுந்தார் ,இரவு நேரம் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு போக அவர்கள் உடனே கோவைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர் ,மின்னலென கோவை பயணம் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதி மூளையில் சிறு ரத்தகசிவு மற்றும் ஒரு இடத்தில அடைப்பும் என்றனர் ,ரத்தக்கசிவு சரிசெய்ய ஒரு அறுவை சிகிச்சை செய்து ,நாற்பதாயிரம் பில்லாக வசூல் செய்த பின்னர் ரத்த அடைப்பை சரி செய்ய ஒரு லட்சத்தை கவுன்ட்டரில் கட்ட சொன்னார் மருத்துவர் ,அவரின் பிள்ளைகளோ பிழைக்க வாய்ப்புள்ள சதவீதத்தை கேட்டு 50 -50 என்றதும் உள்ளதை போட்டு பிழைக்க வைக்க குடிகார தந்தையை பார்த்தபடி யோசிக்கின்றனர் ,மேலும் ஒரு காப்பீட்டு திட்டம் ரத்துசெய்யபட்டுள்ள நிலையில் அரசு எதற்கும் வழியில்லாமல் ஒரு ஏழையை குடிக்க வைத்து (டாஸ்மாக் நடத்தி) கொல்ல போகிறதா ?உறவினர்களோ நண்பர்களோ உதவி செய்ய ஒரு லட்சம் (மருத்துவமனையில் கேட்ட தொகை மட்டுமே )சிறிய தொகையும் அல்லவே ,பிள்ளைகளும் செலவை சதவீதத்தை வைத்தே முடிவு செய்யும் போது மனிதம் மரணித்துவிட்டது என்றே எண்ணத்தோன்றுகிறது .
Subscribe to:
Posts (Atom)