Thursday, December 29, 2011

BLOOM BOX - K.R. SRIDHAR


கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு
கவனிக்கப்பட்டு வரும் பெயர்.

இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ்
உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம்,
இவர் ஒரு தமிழர் என்பதே.


அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?
திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.)
மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ்
பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப்
பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக்
கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின்
இயக்குநராக அவரை நியமித்தது.


செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக்
கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை.
முக்கியமாக
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா
என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும்
பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது.
என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே
விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர்.
அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப்
பதிலாக அதை ஒரு
இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால்
என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்!
மின்சாரம் தயாராகி
வெளியே வந்தது.


இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம்
தயார் செய்து
கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத்
தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும்
அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக
ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க
வேண்டும்.
இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும்
பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு
செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர்.
சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல்
நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப்
பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று
பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25
மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில்
செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப்
பெரும் தொகை.
என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த
தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது
சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும்
சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த
வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு
இருக்கும் என்று நினைத்தார்
அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார்
செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே
பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல
விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு
பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு
இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.


சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள
இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த
நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக
மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம்.
இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட
வெளியிலும் வைத்துக்
கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம். உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின்
இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில்
இருக்கும் கிராம
மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை
என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே
பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால்
இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும்
மின்சாரம் தயார்
செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.


ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம்
கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத்
தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம்
பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில்
அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி
மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் நுட்பத்தை
வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது.'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள்
உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப்
போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை
வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay,கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான்
பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தி மின்சாரம் தயார்
செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8
லட்சம் டாலர்!
அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து
ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த
பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே
மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம்
பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி
பயன்படுத்துகிற அளவுக்கு
அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை
குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று
ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த
தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத்
தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

BLOOM BOX





மின்அஞ்சலில் வந்தது உரிமை இதை எழுதியவருக்கே .

Thursday, June 16, 2011

மனிதம் மரணித்துவிட்டது !

ண்டை வீட்டுக்காரர் ஒருவர் இரண்டு நாட்கள் முன்பு குடித்துவிட்டு வண்டி ஓட்டி எதிரில் வந்த பெண்ணின் காலையும் உடைத்து புளியமரத்தில் மோதி கீழே விழுந்தார் ,இரவு நேரம் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு போக அவர்கள் உடனே கோவைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர் ,மின்னலென கோவை பயணம் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதி மூளையில் சிறு ரத்தகசிவு மற்றும் ஒரு இடத்தில அடைப்பும் என்றனர் ,ரத்தக்கசிவு சரிசெய்ய ஒரு அறுவை சிகிச்சை செய்து ,நாற்பதாயிரம் பில்லாக வசூல் செய்த பின்னர் ரத்த அடைப்பை சரி செய்ய ஒரு லட்சத்தை கவுன்ட்டரில் கட்ட சொன்னார் மருத்துவர் ,அவரின் பிள்ளைகளோ பிழைக்க வாய்ப்புள்ள சதவீதத்தை கேட்டு 50 -50 என்றதும் உள்ளதை போட்டு பிழைக்க வைக்க குடிகார தந்தையை பார்த்தபடி யோசிக்கின்றனர் ,மேலும் ஒரு காப்பீட்டு திட்டம் ரத்துசெய்யபட்டுள்ள நிலையில் அரசு எதற்கும் வழியில்லாமல் ஒரு ஏழையை குடிக்க வைத்து (டாஸ்மாக் நடத்தி) கொல்ல போகிறதா ?உறவினர்களோ நண்பர்களோ உதவி செய்ய ஒரு லட்சம் (மருத்துவமனையில் கேட்ட தொகை மட்டுமே )சிறிய தொகையும் அல்லவே ,பிள்ளைகளும் செலவை சதவீதத்தை வைத்தே முடிவு செய்யும் போது மனிதம் மரணித்துவிட்டது என்றே எண்ணத்தோன்றுகிறது .

Saturday, May 14, 2011

பெண்ணழகு

பெண்ணழகு

கணவன் இறந்த துக்கத்தில் இளம் மனைவி கண்ணீர் வடித்துக்கொண்டு, திருவான்மீயூர்
கல்லறைக் தலத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தாள். அவர்கள் ஜாதியில் கணவன்
சவ அடக்கத்துக்கு மனைவி வரலாம்.

மனைவியை ஒரு நடுத்தர வயது ஆடவன் - செல்வந்தன் மெல்ல மரியாதையுடன் அணுகி,
உங்கள் கணவன் இறந்ததற்க்கு என் ஆழ்ந்த அனுதபங்கள், நீங்கள் இந்த நிமிஷம் கூட
எனக்கு அழகு தேவதையாகத் தெரிகிறீர்கள், இப்போதே தங்களை மணக்க நான் தயார்
என்றான்.

இதைக் கேட்ட மனைவி கோபத்தில் சீறினாள். ஏன்யா! இதுவா சமயம். இதைப் பற்றி
பேசுவதற்கு ? போங்கள், என் கண் முன்னே நிற்காதீர்கள்? என்றாள்.

கணவான், மன்னித்துக்கொள்ளுங்கள்! உங்கள் வனப்பு உங்கள் துக்கத்தையும் கடந்து
என்னைக் கவர்ந்துவிட்டது என்றான்

அதற்கு, அந்த இளம் விதவை, இதற்கே இப்படிச் சொல்கிறீர்களே ! நான் அழாமல்
இருக்கும்போது நீங்கள் பார்த்திருக்க வேண்டும் என்றாள்.

நீதி: *எந்த சமயத்திலும் ஒர் அழகான பெண், தான் அழகானவள் என்பதை மறக்க மாட்டாள்.
*

புதிய நீதிக் கதைகள் புத்தகத்தில் சுஜாதா





வாத்தியார் சுஜாதாவின் கதை ஒன்று மின்னஞ்சலில் இருந்தது ,எனது வசதிக்காக இங்கே சேமிக்கிறேன்

Thursday, April 28, 2011

ஜிமெயில் சேவை



ஜிமெயில் மெயிலில் ஒரு அருமையான யோசனை :நாமெல்லாம் இச்சிபட்டி ,நொச்சிபாளையத்தை தாண்டாத ஆட்கள் என்று கூகிள்க்கு எப்படி தெரியுமோ தெரியவில்லை ,நம்ம ஜிமெயில் அக்கௌன்ட் ஐ வேற எங்கயாவது ஓபன் செய்து இருந்தங்கன்ன உடனே ரெட் டேப் அலெர்ட் வருதுங்கோ .மேல உள்ள படைத்த பாருங்க ,எவனோ ஒருவன் (ஒருத்தி ?!)உங்க அக்கௌண்ட ஓபன் பண்ணி இருக்கான்னு வருது .மேலும் அவர்கள் உங்கள் நாலேட்ஜ் (நம்ம இங்க்லீஷ் இவ்வளவுதான்)இல்லாம செய்திருந்தா உங்க கடவு சொல்ல (நம்ம தமிழ் )மாத்திக்க சொல்றாங்க !
மேலும் ஜிமெயில் இன்பாக்ஸ் இன் கீழே ஐபி விவரங்களை கூட பார்த்துக்கலாம் .

Monday, March 29, 2010

வெள்ளன்களின் அட்டகாசங்கள் ...!



கண்ணாடிகளின் தொல்லை ?!



வீட்டுக்கு போகலாமா ?

Saturday, February 13, 2010

என் காதலி..

என் காதலி..


உறக்கம் தொலைந்த
பின் இரவுகளில்,
தொடர்பறுந்த
பிம்பப் பரிமாணங்களாய்
அவள்!


பணி செய்துகொண்டிருக்கையிலும்
என்னை ஆள்பவள்,
அவள்!


இவ்வுலகை ரசிக்க வைத்தவள்,
அவள்!


மனநிலை மாற்றங்களை
மொத்தமாய் குத்தகைக்கெடுத்தவள்
அவள்!


இன்ப, துன்பங்களின்
காரண கர்த்தா
அவள்!


சிரிக்க,
அழ,
வெட்கப்பட வைப்பவள்,
அவள்!


தாயை,
தாய்மையை
உணர வைப்பவள்
அவள்!


நிகழ், எதிர்கால
'அகர முதல'
அவள்!


நினைவினிலும்,
நிஜத்தினிலும்
என்னை முழுவதுமாய்
ஆக்கிரமித்துக்கொண்டு,
அவள்!!


என் காதலி - அந்த 'அவள்' !!!

-நண்பர் ஒருவரின் கவிதை (அப்படா சுட்டாச்சு !)




Saturday, January 30, 2010

இந்திரா காந்தி


திருப்பூரில் எழாவது புத்தக கண்காட்சி நேற்று (29/01/2010) துவங்கியது ,இரவு ஒன்பது மணியளவில் அங்கே சென்றிருந்த போது கூட்டம் அதிகமில்லை ,ஒரு சில கடைகளில் புத்தகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தர்கள் ,புத்தகங்களை வாங்கியவுடனே படித்து முடித்துவிட்டுத்தான் மறு வேலை பார்க்க தோன்றும் எனக்கு ,இப்போதெல்லாம் வரலாறுகள் அதிகம் படிக்க பிடிக்கிறது ,சென்ற வாரம் ராஜீவ் கொலை வழக்கு புத்தகத்தை முடித்தபின் நேற்று எனக்கு கிடைத்த புத்தகம் இந்திரா காந்தி ,R.முத்துக்குமார் பல்வேறு புத்தகங்களில் இருந்து தொகுத்து தமிழில் எழுதியது ,புத்தகம் படிக்க நேர்ந்தபோது சில பல கொட்டாவிகளை தவிர்க்க இயலவில்லை (நேரம் மட்டுமே காரணமல்ல) எதையோ எளிதில் முடித்து விட வேண்டிய அவசரம் எழுத்தில் தெரிந்தது .எந்த ஒரு விசயத்தையும் முழுதாக எழுதவில்லை என்பது என் எண்ணம் ,இந்திராவின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்புகளில் சஞ்சய் காந்தியின் திருமண நிகழ்வுகளே இல்லை ,
இப்படி சிலகுறைகள் இருந்தாலும் ஒரு முன்னோட்டமாக அறிந்துகொள்ள உதவும் ,விரிவாக படிக்க வேறு புத்தங்கள் இருந்தால் கூறுங்களேன் ..

இந்த புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்

நல்ல யோசனை ஒன்று :எப்படியும் கல்யாண வீடுகளில் தாம்பூலம் கொடுப்பார்கள் தானே ,அதற்கு பதிலாக என் மணவிழாவிற்கு வருவோர்க்கு நான் ஒரு மரக்கன்று தரலாம் என்றுள்ளேன் என்றார் நண்பர் ,நாமும் செயல்படுத்தலாமே .

என்னைப்பற்றி

My photo
தாராபுரம், திருப்பூர் /தமிழ்நாடு, India