Wednesday, November 18, 2009
3G தொழில்நுட்பம்
தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் இன்றளவும் நாம் பயன்படுத்தி வருவது 2G தொழில்நுட்பம், மேலும் BSNL,MTNL ஆகிய நெட்வொர்க்குகள் 3G தொழில்நுட்பத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியுள்ளன . 2G ,2.5G, 3G இன் வித்தியாசங்கள் முறையே :
2G :
>> போன் கால்கள்
>>வாய்ஸ் மெயில்கள்
>> சிம்பிள் ஈமெயில்கள்
வேகம் :பத்து கிலோபைட்ஸ் / நொடி
2.5 G :தற்போதய நடப்பில் உள்ளது
>>போன் கால்கள் மற்றும் பேக்ஸ் செய்திகள்
>>வாய்ஸ் மெயில்கள்
>> சிம்பிள் ஈமெயில் மற்றும் பெரிய ஈமெயில்கள்
>>இணைய உலாவல்
>>வரைபடங்கள் (மேப்புகள்)
வேகம் :அறுபத்தி நன்கு முதல் நூற்றி நற்பத்தி நன்கு கிலோபைட்ஸ் / நொடி
3 G :வரவுள்ள தொழில்நுட்பம்
>>போன் கால்கள் மற்றும் பேக்ஸ் செய்திகள்
>>வாய்ஸ் மெயில்கள்
>> சிம்பிள் ஈமெயில் மற்றும் பெரிய ஈமெயில்கள்
>> வீடியோ கான்பரென்சிங்
>> தொலைகாட்சி நிகழ்ச்சிகள் தடையின்றி பார்த்தல்
வேகம் :நூற்றி நற்பத்தி நன்கு கிலோபைட்ஸ் / நொடி முதல் இரண்டு மெகா பைட்ஸ் வரை இருக்கும் .
இதனை கொண்டு மூன்று நிமிடங்கள் ஓடும் ஆடியோ பைலை பதினோரு செகண்டுகளில் இருந்து ஒன்றரை நிமிடத்தில் டவுன்லோட் செய்துகொள்ள இயலும் .
இந்த தொழில் நுட்பம் நமக்கு தான் புதிது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் 2001 முதலே அங்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது மேலும் பெப்ரவரி 22 அன்று சென்னையில் மத்திய மந்திரி திரு அ.ராசா அவர்களால் அறிமுகபடுத்தபட்டு முதல்வர் அவர்களுடன் வீடியோ கான்பரென்சிங் முறையில் பேசப்பட்டது ,இனி நமது ஊர்களிலும் பொய் பேச இயலாவண்ணம் மூன்றாம் தலைமுறை அலைபேசிகளில் பேச முற்படுவோம் .(எங்கேயாவது பொய் சொன்னா அலைபேசியை அப்படியே திருப்பி இருப்பிடத்தை காட்ட சொல்லி விடுவார்களே ! )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment