2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும் . அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும் . ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும் .
3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ - க்களை உபயோகித்தால் பிஸியாக , வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும் .
4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே நகத்தையும் கடித்து வையுங்கள்.
5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும் .
6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே " எஸ் ...." என்றோ அல்லது " சக்சஸ் " என்றோ சொல்லுங்கள் .
7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள் .
8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள் , கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள் .
9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் திறந்தே வையுங்கள் . அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும் , நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள் .
10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ , விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள் .
11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய் , ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள் , பிறகு பிஸியாக இருந்தேன் , ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம் .
12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள் . கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள் . மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள் .
13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ , பைல்களையோ திறந்து வையுங்கள் . அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது , குளோஸ் செய்வது , மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள் .
14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள் . சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள் .
15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் ( உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும் ) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள் .
16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள் . அப்படியே ஆற விட்டுவிடுங்கள். மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம் . கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என ( மற்றவர் காதில் ) விழும்படி சொல்லுங்கள் .
17. ( வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால் ) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டிகொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள் . ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம் .
18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள் . நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள் ?
Monday, September 28, 2009
ஆபீஸ் வேலையை காப்பற்றிக்கொள்ள ?!
(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி ? 1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ , கோடையோ (code) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள் .
வேலை நேரத்தில் ஒழுங்காக வேலை செய்யாமல் வலைபூக்களில் எழுதுவோர் சங்கத்தலைவர்
Saturday, September 26, 2009
சரக்குகள் தீர்த்து போனால்..
இணையத்தில் உலவுவதை பொழுது போக்காக வைத்திருந்தவன் நான் ,மேலும் எதோ ஒரு விசையால் உந்தப்பட்டு எனக்கு கிடைக்கின்ற தகவல்களை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தும் நோக்கில் ப்ளாக்கில் எழுத ஆரம்பித்தேன் ,நான் வசிக்க நேர்ந்த விஷயங்கள் சம்பவங்களை சுவையாக எழுத எண்ணம் அனால் சினிமா சம்பத்தப்பட்ட பாடல் மற்றும் படங்களை டவுன்லோட் செய்யும் சுட்டிகளை கொண்ட வலைபூக்களே அதிகம் ஹிட் அடிப்பவைகளாக உள்ளன ?!
நம்மிடம் சொந்த சரக்குகள் தீர்ந்து போகும்போதுதான் எதுவுமே எழுதாமல் இப்படிபட்ட லிங்க்க்குகளை கொடுக்க தோன்றும் ,நான் pkp,tamilnenjam,idlyvadai,சுதந்திர மென்பொருட்கள்,gouthaminfotech ,மேலும் பலரின் இடுகைகளை கண்டு வியந்து பழைய இடுகைகளையும் ஒன்று விடாமல் படித்து வருகிறேன் ,இணையத்தில் இது ஒரு நல்ல முயற்சியும் கூட ..வளரட்டும் இவர்தம் தமிழ் சேவை ...சரக்குகள் தீர்ந்தோர் பெட்டியை கட்டுவது நல்லது .அடுத்தோர் கோவணத்தை உருவி அங்கவஸ்திரம் போடத்தான் வேண்டுமா ?சிந்திப்போம் மேலும் எனது இன்றைய செய்தி ஓன்று இணைப்பில் உள்ள audacity மென்பொருளை கொண்டு நிறைய சவுண்ட் எடிட்டிங் வேலைகளை செய்ய இயலும்
சுட்டி
நம்மிடம் சொந்த சரக்குகள் தீர்ந்து போகும்போதுதான் எதுவுமே எழுதாமல் இப்படிபட்ட லிங்க்க்குகளை கொடுக்க தோன்றும் ,நான் pkp,tamilnenjam,idlyvadai,சுதந்திர மென்பொருட்கள்,gouthaminfotech ,மேலும் பலரின் இடுகைகளை கண்டு வியந்து பழைய இடுகைகளையும் ஒன்று விடாமல் படித்து வருகிறேன் ,இணையத்தில் இது ஒரு நல்ல முயற்சியும் கூட ..வளரட்டும் இவர்தம் தமிழ் சேவை ...சரக்குகள் தீர்ந்தோர் பெட்டியை கட்டுவது நல்லது .அடுத்தோர் கோவணத்தை உருவி அங்கவஸ்திரம் போடத்தான் வேண்டுமா ?சிந்திப்போம் மேலும் எனது இன்றைய செய்தி ஓன்று இணைப்பில் உள்ள audacity மென்பொருளை கொண்டு நிறைய சவுண்ட் எடிட்டிங் வேலைகளை செய்ய இயலும்
சுட்டி
Tuesday, September 22, 2009
Saturday, September 19, 2009
ஆதி முதல் அந்தம் வரை ...
நான் கிராமபுறங்களில் படித்துவிட்டு வேலைக்கு வந்தவன் ,நாங்கள் படிக்கும்போது 6 ஆம் வகுப்பிலிருந்து 7 ஆம் வகுப்பிற்கு போகும்போது பழைய பாடபுத்தக்கங்களை பாதிவிலைக்கு கொடுத்து விட்டு (பிட் அடித்தது போக மீதிஉள்ளதைத்தான் ) 7 ஆம் வகுப்பு புத்தங்களை வங்கி கொள்ளுவோம்ஏன்னென்றால் புதிய புத்தகங்கள் பள்ளி திறந்தவுடன் தான் கடைகளில்கிடைக்கும் ( . முன்னாடியே படிக்க என்ன செய்வது?!) மேலும் நண்பர் ஒருவரின் தங்கை தற்போது B Ed., படித்து கொண்டிருக்கிறார் அவருக்காக சில ஸ்டேட் போர்டு புத்தங்களை கடைகளில் கேட்ட போது புத்தகங்கள் இப்போதுகடைகளுக்கு வருவதில்லை எனவும் அந்தந்த பள்ளிகளில் மட்டுமே கிடைக்கும்எனவும் கூறக்கேட்டேன் ,மேலும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் அந்தபுத்தகங்களை பள்ளியில் ஒப்படைத்து விட்டே அடுத்த வகுப்பிற்கு செல்லமுடியும், புத்தங்கங்கள் வெளியே கிடைக்கும் வாய்ப்புகள் குறைவே
அனால் இணையத்தில் இவை இலவசமாக டவுன்லோட் செய்ய கிடைக்கின்றன.
ஸ்டேட் போர்டு புத்தகங்கள்(தமிழ் மற்றும் அங்கில வழி இரண்டும் உண்டு )
NCERT புத்தங்கங்கள்
அனால் இணையத்தில் இவை இலவசமாக டவுன்லோட் செய்ய கிடைக்கின்றன.
ஸ்டேட் போர்டு புத்தகங்கள்(தமிழ் மற்றும் அங்கில வழி இரண்டும் உண்டு )
NCERT புத்தங்கங்கள்
Wednesday, September 16, 2009
மலர்வளையம்
எழுத்தாளரும் , வானொலிகளில் இன்று ஒரு தகவல் தரும் நல்ல ஒரு சன்றோருமான தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் காலமானார் ,வாசகர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள் அவர்களின் குடும்பத்தார்க்கு தெரிவித்து கொள்கிறேன் .மேலும் அவரின் இன்று ஒரு தகவல் என்றும் நமக்கு நல்லதையே புகட்டிக்கொண்டிருக்கும் .
Monday, September 14, 2009
நம்ம போட்டோ தேம்ஸ் நதிக்கரையில் ...
இன்று ஒரு சின்ன தகவல் மற்றும் நாலு ஈ-புத்தகங்கள் உங்களுக்கு !!
நீங்களும் தன் டாலர் நோட்டுல போட்டோவ அடிச்சு பாருங்களே !! just for fun
கணக்கு புதிர் புத்தகங்கள் சிலது
1001 maths problems
maths Puzzles
Puzzles to puzzle u
போட்டோபண்யா(நம்ம தமிழ் மொழி பெயர்ப்பு ) என்ற இணைய தளத்தில் நம்முடைய புகைபடங்களை ஏற்றி நமக்கு நாமே போஸ்டர் அடிக்கலாம் ,சுவற்றில் பெரிய ப்ளெக்ஸ் வைத்து போலசெய்யலாம் ,நம்முடைய படத்தை டாலர் நோட்டுகளில் அடித்து மகிழலாம்
நீங்களும் தன் டாலர் நோட்டுல போட்டோவ அடிச்சு பாருங்களே !! just for fun
கணக்கு புதிர் புத்தகங்கள் சிலது
1001 maths problems
maths Puzzles
Puzzles to puzzle u
Thursday, September 10, 2009
சாப்ட்வேர் கம்பெனி வேலையும் அன்னதான சாப்பாடும் !
"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு,பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?.அப்படி என்னதான்வேலை பார்பீங்க?" - நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.நானும்
விவரிக்க ஆரம்பிதேன்.
"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.அதே மாதிரி எல்லா
வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.இதுக்காக எவ்வளவு பணம்
வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."
"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாபிடுறான்".
"இந்த மாதிரி அமெரிக்கால்-ல,இங்கிலாந்து-ல இருக்குற Bank,இல்ல எதாவது
கம்பெனி "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.எனக்கு இத செய்து கொடுங்க
கேப்பாங்க.இவங்கள நாங்க "Client" nu சொல்லுவோம்."
"சரி"
"இந்த மாதிரி Client-a மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச
பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம்.இவங்க பேரு "Sales
Consultants,Pre-Sales Consultants....".இவங்க போய் Client கிட்ட
பேச்சுவார்த்தை நடத்துவாங்க.காசு கொடுகுறவன் சும்மாவா
கொடுப்பான்?.ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான்.உங்களால இத பண்ண முடியுமா? அத
பண்ண முடியுமான்னு?.அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும் "முடியும்"னு
பதில் சொல்றது இவங்க வேலை.
"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?
"MBA,MS nu பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க"
"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA
படிக்கணும்?" - அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.
"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுதுடுவானா?"
"அது எப்படி?இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனி-ளையும் இருப்பாங்க.500
நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம்,50 நாள்ல முடிச்சு
தரோம்னு பேரம் பேசுவாங்க.இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு
ப்ராஜெக்ட் கிடைக்கும்"
"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்?
ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"
"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும்.50 நாள்னு
சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன
வேணும்னு அவனுக்கும் தெரியாது,என்ன செய்யனும்னு நமக்கும்
தெரியாது.இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க
deliver பண்ணுவோம்.அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,எங்களுக்கு
இது வேணும்,அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்."
"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.
"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR
raise பண்ணுவோம்னு" சொல்லுவோம்.
"CR-na? "
"Change Request.இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை
பார்த்துட்டோம்.இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு
சொல்லுவோம்.இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."அப்பா-வின்
முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
"இதுக்கு அவன் ஒத்துபானா?"
"ஒத்து கிட்டு தான் ஆகணும்.முடி வெட்ட போய்ட்டு,பாதி வெட்டிட்டு வர முடியுமா?"
"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"
"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.இதுல project managernu ஒருத்தர்
இருப்பாரு.இவரது தான் பெரிய தலை.ப்ராஜெக்ட்
success-aanalum,failure-aanalum இவரு தான் பொறுப்பு"
"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு"
"அதான் கிடையாது.இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது"
"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" - அப்பா குழம்பினார்.
"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம்.எப்போ எவன்
குழி பறிப்பானு டென்ஷன் ஆகி tired ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை"
"பாவம்பா"
"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட
போய் சொல்லலாம்."
"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"
"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.நாங்க என்ன சொன்னாலும்
தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான்
இவரோட வேலை"
"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி"
"இவருக்கு கீழ Tech Lead,Module Lead,Developer,Testernu நிறைய அடி
பொடிங்க இருப்பாங்க"
"இத்தனை பேரு இருந்து,எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா,வேலை easya முடிஞ்சிடுமே?"
"வேலை செஞ்சா தானே?.நான் கடைசியா சொன்னேன் பாருங்க,Developer,Tester
னு,அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க.அதுலையும் இந்த
Developer வேலைக்கு,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட
மானம்,மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி,நெத்தில திருநீறு பூசி
அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க"
"அந்த Testernu எதோ சொன்னியே?அவங்களுக்கு என்னப்பா வேலை?"
"இந்த Developer பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.புடிக்காத
மருமக கை பட்டா குத்தம்,கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."
"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?.புதுசா தான்
இருக்கு.சரி இவங்களாவது வேலை செய்யுராங்கள.சொன்ன தேதிக்கு வேலையமுடிச்சு
கொடுத்துடுவீங்கள்ள?"
"அது எப்படி?.சொன்ன தேதிக்கு projecta முடிச்சி கொடுத்தா அந்த குற்ற
உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும்.நிறைய பேரு
அந்த அவமானத்திற்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"
"Client சும்மாவா விடுவான்?.ஏன் late-nu கேள்வி கேக்க மாட்டான்?"
"கேக்கத்தான் செய்வான்.இது வரைக்கும் team குள்ளையே காலை வாரி
விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார
ஆரம்பிப்போம்"
"எப்படி?"
"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.அன்னைக்கு Team
Meetingla வச்சி நீ இருமின,உன்னோட hair style எனக்கு புடிகலை."இப்படி
எதாவது சொல்லி அவன குழப்புவோம்.அவனும் சரி சனியன எடுத்து தோள்ல
போட்டாச்சு,இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".
"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு
வந்துடுவீங்க அப்படித்தான?"
"அப்படி பண்ணினா,நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கனும்."
"அப்புறம்?"
"Project முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற
மாதிரியும்,அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க
ஆரம்பிப்போம்."
"அப்புறம்?" "அவனே பயந்து போய் "எங்கள தனியா விட்டுடாதீங்க.உங்க டீம்-ல
ஒரு ஒன்னு,ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது
பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."இதுக்கு பேரு "Maintanence and
Support".இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
"Project அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு
வரது மாதிரி.தாலி கட்டினா மட்டும் போது,வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு
பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் Clientuku
புரியஆரம்பிக்கும்."எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."
நன்றி -இட்லி வடையார்
Wednesday, September 9, 2009
புது வருடம் புது சபதம் ...
நாம் ஒவ்வொரு வருடமும் முதல் தேதிகளில் ஏதவதொரு சபதம் எடுப்போம் பிறகு மறந்து விடுவோம் ,இதை மட்டும் மறக்காமல் பலர் செய்து வருகிறோம் .
மேலும் யோசித்து பார்த்தால் வருடத்திய முதல் தேதிகளிலேயோ,நாமாக குறித்து வைத்து முடிவு எடுக்கும் தேதிகளிலோ விசேசம் என்று எதுவும் இல்லை ,நல்ல முடிவுகளோ சபதங்களோ தோன்றுகின்ற காலமே நல்ல நேரம் !
நான் இவ்வளவு மொக்கை போட வைத்த விஷயம் இன்று ஒரு ஸ்பெஷல் டே 09/09/09
நூற்றாண்டிற்கு ஒரு முறை வரும் இதுமாதிரி தேதிகள் ,வெளி நாட்டினர் சிலர் இன்று கல்யாணம் செய்கின்றனராம் ,பலர் தேதியின் அருமை தெரியாமல் விவாகரத்து கூட செய்து கொண்டிருக்கலாம் எப்படியாயினும் வாழ்க வளமுடன் !!
இங்கே கிளிக்கவும்
Friday, September 4, 2009
Thursday, September 3, 2009
மக்கள் நிலையும் தலைவர்கள் வாழ்வும் !!!
செய்திகள் ...
டோனி ஹம்மர் ரக கார் வாங்கினர்
ஹர்பஜன் சிங் ஹம்மர் ரக கார் வாங்கினர்
தமிழ் நடிகர் கமலஹாசன் வைத்துதுள்ள ஹம்மர் ரக கார் தளபதி ஸ்டாலின் அவர்களின் கரை விட புதிய வகை வண்டி ஆகும் !!
உண்மைகள் ...
துவரம் பருப்பு செஞ்சுரி போட்டுவிட்டது !
சர்க்கரை 38 ருபீஸ் நாட் அவுட் !
பெருந்தலைவர் காமராஜர் இறந்த போது கையில் வைத்திருத்த தொகை 65 /-
இன்றைய பெரும் தலைகள் கையில் வைத்திருக்கும் தொகை எனக்கா தெரியும்?
புலம்பலை விடவேண்டும் என நினைக்கிறேன் முடியலியே !!
நான் கண்டு வந்த நல்ல வெப்சைட் இங்கே
ஆங்கிலத்தில் எனக்கு கிடைத்த மருத்துவ கையேடு ஒன்று இங்கே
Subscribe to:
Posts (Atom)