நாம் ஒவ்வொரு வருடமும் முதல் தேதிகளில் ஏதவதொரு சபதம் எடுப்போம் பிறகு மறந்து விடுவோம் ,இதை மட்டும் மறக்காமல் பலர் செய்து வருகிறோம் .
மேலும் யோசித்து பார்த்தால் வருடத்திய முதல் தேதிகளிலேயோ,நாமாக குறித்து வைத்து முடிவு எடுக்கும் தேதிகளிலோ விசேசம் என்று எதுவும் இல்லை ,நல்ல முடிவுகளோ சபதங்களோ தோன்றுகின்ற காலமே நல்ல நேரம் !
நான் இவ்வளவு மொக்கை போட வைத்த விஷயம் இன்று ஒரு ஸ்பெஷல் டே 09/09/09
நூற்றாண்டிற்கு ஒரு முறை வரும் இதுமாதிரி தேதிகள் ,வெளி நாட்டினர் சிலர் இன்று கல்யாணம் செய்கின்றனராம் ,பலர் தேதியின் அருமை தெரியாமல் விவாகரத்து கூட செய்து கொண்டிருக்கலாம் எப்படியாயினும் வாழ்க வளமுடன் !!
இங்கே கிளிக்கவும்
No comments:
Post a Comment