Saturday, December 26, 2009

கூகுளில் ஆபாசம் ...


நான் எனது நண்பரின் மகனுக்கு அவனுக்கு பத்து வயது இன்டர்நெட்டை எப்படி உபயோக படுத்த வேண்டும் என விளக்கி கொண்டிருந்த போது கூகுளில் தமிழ் மூலமே நாம் நினைத்ததை தேடலாம் என சொல்லி விருப்ப மொழியாக தமிழை தெரிவு செய்து "v" என ஒரு எழுத்தை டைப் செய்தால் கூட வேலைக்காரி கோமதி ,விந்து முந்துதல் என பாலியல் சார்ந்த மற்றும் ஆபாச விளம்பரங்களே முதலில் வருகின்றன ,ஒரு எழுத்திற்கு மட்டுமல்ல தமிழ் மொழியை தெரிவு செய்து எந்த எழுத்தை டைப் செய்தலும் இதே நிலை இணையம் மூலம் தொழில் வாய்ப்புகள் கூடி நிறைய சம்பாதித்து இளைய தலைமுறை சீரளியபோவத்தையும் இணையத்திலேயே பார்க்க போகிறோம் என்று நினைக்கிறன் ...கூகிள் இந்தியாவில் என்னதான் செய்துகொண்டு இருகிறார்களோ தெரியவில்லை ! விளம்பரங்கள் மூலம் காசு பார்க்கும் கூகிள் ஆபாச போக்கை கைவிடுமா ?

ஆயிரத்தில் ஒருவன்

Thursday, December 17, 2009

நீ எப்படி தலைவன் ஆனாய்?

எங்கள் நாட்டில் ஒருவர்
தலைவனாக வேண்டுமென்றால் அவர்; ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக
இருக்கவேண்டும்,
அல்லது அவரது குடும்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் விதவை இருக்கவேண்டும்
; குறைந்தபட்சம் இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு, உடன்கட்டை ஏறலாம்
என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான உறவு கொண்ட
ஒருவராக இருந்திருக்க வேண்டும்.
இவையெதுவும் இல்லாவிட்டால், ஒரு சில திரைப்படங்களிலாவது
கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும் ; மேலே சொல்லப்பட்டுள்ள எந்தவொரு
தகுதியும்
இல்லாத மனிதன் நீ. ஈழத்தமிழர் சுதந்திரமாக வாழ, சுயமரியாதையுடன் வாழ
“தமிழீழம்” வென்றெடுப்பது ஒன்றுதான் தீர்வு என்பதை இலட்சியமாக ஏற்றுக்
கொண்டு,
அந்த இலட்சியத்தித்தை எந்தவொரு சூழ்நிலையிலும், எதற்காகவும் விட்டுக்
கொடுக்காதவன்
நீ. இவ்வாறு ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் இன்றுவரை உறுதியாக,
நேர்மையாக இருக்கின்ற காரணத்தினால் உன்னை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள்
“தமிழீழத் தேசியத் தலைவர்” என்று அன்போடு அழைக்கிறார்கள்.
இப்படி உலகத் தமிழர்களே ஏற்றுக் கொண்டாலும், எங்கள் தமிழ்நாட்டுத்
தலைவர்களுக்கு உரிய எந்தவொரு தகுதியும் இல்லாத நீ எப்படித் தலைவன்
ஆனாய்?
பொதுவாக எங்கள் நாட்டில் நேர்மை, ஒழுக்கம் என்பதெல்லாம்
தொண்டர்களுக்கும்,
பொது மக்களுக்கும்தான். அரசியலுக்கு வரும்போது அன்றாட
உணவுக்கும், மாற்றுத்துணிக்கும் அல்லல் பட்டவர்கள்தான் எங்கள் தலைவர்கள்
என்றாலும், இன்றைக்கு அவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஆனால்
நீயோ
30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவனாக இருந்து
வந்தாலும், வெளிநாடுகளில் உனக்குச் சொத்துக்கள் இல்லை. ஆடம்பர மாளிகைகள்
இல்லை.
அட சுவீஸ்
வங்கியில்கூட உனக்கு ஒரு கணக்கு இல்லையே. அதுதான் போகட்டும்! மது, புகை
என்று உனக்கு ஒரு பழக்கமும் இல்லையாமே.

அதுமட்டுமல்ல! உன் இயக்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்தப் பழக்கங்கள்
கூடாதென்று கட்டுப்பாடாமே! இதுவெல்லாம் பரவாயில்லை. உனக்கு ஒரேயொரு
மனைவிதான் என்று உறுதியாகச் சொல்லுகிறார்களே! எங்களைப் பொறுத்தவரை தலைவன்
என்றால், குறைந்தது இரண்டு மனைவிகள் ; அங்கங்கே பல தொடர்புகள் இருக்க
வேண்டும். இவையெல்லாம் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? எங்கள் வாழும்
வள்ளுவரின் மகளுக்கும், மகன்வழிப் பேரனுக்கும் ஒரே வயதுதான். எங்களுக்கு
அதில்
எவ்வளவு
பெருமிதம் தெரியுமா? ஆனால் உனது மூத்த மகனுக்கும் அடுத்த மகளுக்கும்
உள்ள இடைவெளி பத்து வருடங்கள் என்கிறார்கள். இந்த பத்து வருடங்களும், ஈழ
விடுதலைப் போராட்டம் மிகவும் நெருக்கடியில் இருந்த காலகட்டம் என்றும்,
உனது பிள்ளைகளுக்கிடையே உள்ள இந்த வயது வேறுபாடு, அந்தக் காலகட்டத்தில்,
நீயும், உன் மனைவியும், சாதாரண கணவன், மனைவி என்ற உறவையும்; கடந்து,
போராளிகளோடு, போராளிகளாய் போர்க்களத்தில் நின்றதை உணர்த்துகிறது.

இப்படி தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து சொந்த
சுகதுக்கங்களை மறந்து, போராட்டத்தில் ஈடுபடுபவன் ஒரு தலைவனா? நீ எப்படி
தலைவன்
ஆனாய்?
சிங்கமே வா! புலியாய் புறப்படு! இருப்பது ஓர் உயிர்! அது தமிழுக்காக
போகட்டும்! தமிழனுக்காக போகட்டும்! இப்படியெல்லாம் மேடையில் பேசுவதோடு
நின்றுவிட வேண்டும்.அதுதான் தலைவனுக்கு அழகு! அதிகம் போனால், காலை
சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கலாம்! ஏன்
ஆயுதப்
போராட்டத்திற்கும் கூட
ஒருவன் தலைமை ஏற்கலாம். ஆனால், போர் நடக்கின்ற இடத்தில் கூட அல்ல,
நாட்டிலேயே இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு வெளிநாட்டில் சுகமாக மனைவி,
பிள்ளைகளோடு
இருந்து கொண்டு, போராட்டத்தை வழி நடத்த வேண்டும்.

அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு! ஆனால் பாவி நீ செய்தது என்ன?
தாய்த்தமிழகத்தில் தங்கியிருப்பதுக்கூட, மற்றவர்கள் உனது விடுதலை
இயக்கத்திற்கு
கட்டுப்பாடுகள் விதிக்க காரணமாகவிடும் என்று, களத்திற்கு சென்றுவிட்டாய்.
சென்றது சென்றாய்!தனியே செல்லக்கூடாதா? உன் மனைவியையும், பிள்ளைகளையும்
கூட
விட்டுசெல்லவில்லையே!

எங்கள் தலைவர்களை பார்! வாரிசுகள் என்று வந்துவிட்டால், சின்னவீடு,
பெரியவீடு என்ற பேதமெல்லாம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரு பதவி!
அனைவருக்கும் ஒரு அடைமொழி! இதையெல்லாம் கற்றுக்கொள்ளாத நீ எப்படித்
தலைவன்
ஆனாய்! தற்கொலைப் படையில் முதல் பெயர் உன் பெயர்! கழுத்தில் கட்டப்படும்
நச்சுக் குப்பிக்கும் நீ விதிவிலக்கல்ல! காடுதான் உறைவிடம் என்று ஆன
பிறகு,
உணவிலும் கூட உனக்கும், இதர
போராளிகளுக்கும் இடையே பாகுபாடு இல்லை.

இவையெல்லாம் போகட்டும்! வீட்டுக்கொருவரை இயக்கத்திற்கு தாருங்கள்
என்றாய். தந்தார்கள் ஆயிரக்கணக்கில். தங்கள் பிள்ளைகளைத் தந்தவர்கள்
எல்லாம்
தாங்கள் போரில் ஈடுப்பட இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் தந்தார்கள். தமிழீழ
விடுதலைக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட உன்னிடம் யார் கேட்டார்கள்?
பாவி!
உன் மூத்தப்பிள்ளையை, இனித் திரும்பமாட்டான் என்று தெரிந்தும்
களத்திற்கு அனுப்பினாயே! எப்படித் துணிந்தாய்? மொத்த ஈழத் தமிழினமும்
இன்று
முள்வேளிக்குள்
அகதிகளாய் அடைப்பட்டு இருக்கிறது.

போகட்டும்! அதன் தலையெழுத்து அப்படி! ஆனால் உன் வயதான தந்தையையும்,
தாயையும் மற்ற அகதிகளோடு, அகதிகளாய் விட்டு வைத்திருக்கிறாயே? ஏனய்யா
இப்படி!
உன்னைப் போன்ற உறுதியும், வீரமும் மிக்க தியாக உள்ளம் படைத்த ஒருவன்
பிறப்பதற்கு யோக்கியதை உடைய இனம் இந்தத் தமிழினம் அல்லவே! எங்களுக்கு
திரைப்படங்களே
வாழ்க்கையாகிப் போயின! தேர்தல்களோ திருவிழாக்கள் ஆகிவிட்டன! உனது அருமை
நமது மக்களுக்கு இன்றைக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ஆனால்
உன்னைப்
பற்றிய சரியான மதீப்பீட்டை வரலாறு சரியாகவேச் செய்யும். இன்றைக்கு
உன்னையும்
உனது இயக்கத்தையும் ஒழித்துக்கட்டி விட்டதாக இறுமாந்து நிற்கும் இனவெறி
நாய்களும், அவர்களுக்கு உதவி செய்த குள்ளநரிக்கூட்டமும் இன்றைக்கு
வேண்டுமானால், மனம் மகிழ்ந்து, தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்துக்
கொள்ளாலாம்.
ஆனால் எதிர்கால சரித்திரமோ, இந்த இனவெறியர்களையும், இணைந்து நின்ற
குள்ளநரிகளையும், நயவஞ்சகர்கள், நாணயமற்றவர்கள்; சொந்த இனத்தையே
காட்டிக்கொடுத்த துரோகிகள் என்று பட்டியலிட்டு காறிஉமிழும்போது, தன் இன
விடுதலைக்காய், தன் இனத்தின் சுதந்திரமான, சுயமரியாதைக்கான
வாழ்க்கைக்காய் போராடிய உன்னை “மாமனிதன்” என்று என்றென்றும் பாராட்டும்.
ஏனென்றால் மரணம் என்பது தன் பெண்டு. தன் பிள்ளை, தன் குடும்பம் என்று
வாழும் தற்குறிகளுக்குத்தான். உன்னைப்போன்ற மாமனிதர்களுக்கு மரணம் என்பது
இல்லை. நீ இருந்தாலும், இல்லையென்றாலும், இனி, தன் இன விடுதலைக்காக
உலகில் எந்த
இனம்,
எங்கு போராடினாலும், அந்தப் போராட்டத்திற்கு அடையாளமாக இருக்கபோவது
உன் முகம்தான்!

வாழ்க நீ எம்மான்!

நன்றி : கிளர்ச்சியாளன் வழக்கறிஞர்-சேசுபாலன்
மற்றும் முத்தமிழ் குழுமம் .

Tuesday, December 15, 2009

இந்திய அணி வெற்றி ...

சேவாக் :ஏய் நான்தான் பெரிய ரவுடி ...!
டெண்டுல்கர் :கொஞ்சம் தள்ளி போயிருக்க கூடாதா அங்கயே நொண்டுதே ...
சேவாக்: சனியன் போகமட்டிங்குதே ...

சேவாக்:50 அறுபதுக்கெல்லாம் இதுக்குமேல தூக்க கூடாது மாப்ள ...



சேவாக்:கைய மடக்காத இன்னிக்கு நான் அடிகலன்னா இந்த துண்டு உன் தலைக்கு வந்திருக்கும் .

பேட்ஸ்மேன் : ஒண்ணா சேர்ந்து இருக்க சொல்றாங்க ஆனா இப்படி பிரிஞ்சு ஓடுனாதான் ரன்ன்னுங்கறாங்க கொடுமையடா சாமீ!



பேட்ஸ்மேன் 1: மாப்ள டக்குன்னு திரும்பாத அந்த பிகர் பயந்துக்க போவுது ?!

இலங்கை பேட்ஸ்மேன்: நானும் ரவுடிதான் ...



இலங்கை பேட்ஸ்மேன்:கொய்யாலே அங்கேயே போகுதே ...

இந்திய கீப்பர் :நல்ல வேல நாம புடிச்சு அடிக்கணும்னா கண்ணாடிய கழட்ட வேண்டியிருந்திருக்கும் ...

Thursday, November 19, 2009

பெவிகால் விளம்பரங்கள் சிலது...

பெவிகால் விளம்பரங்கள் சிலது...














Wednesday, November 18, 2009

3G தொழில்நுட்பம்


தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் இன்றளவும் நாம் பயன்படுத்தி வருவது 2G தொழில்நுட்பம், மேலும் BSNL,MTNL ஆகிய நெட்வொர்க்குகள் 3G தொழில்நுட்பத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியுள்ளன . 2G ,2.5G, 3G இன் வித்தியாசங்கள் முறையே :

2G :

>> போன் கால்கள்
>>வாய்ஸ் மெயில்கள்
>> சிம்பிள் ஈமெயில்கள்
வேகம் :பத்து கிலோபைட்ஸ் / நொடி

2.5 G :தற்போதய நடப்பில் உள்ளது

>>போன் கால்கள் மற்றும் பேக்ஸ் செய்திகள்
>>வாய்ஸ் மெயில்கள்
>> சிம்பிள் ஈமெயில் மற்றும் பெரிய ஈமெயில்கள்
>>இணைய உலாவல்
>>வரைபடங்கள் (மேப்புகள்)

வேகம் :அறுபத்தி நன்கு முதல் நூற்றி நற்பத்தி நன்கு கிலோபைட்ஸ் / நொடி

3 G :வரவுள்ள தொழில்நுட்பம்

>>போன் கால்கள் மற்றும் பேக்ஸ் செய்திகள்
>>வாய்ஸ் மெயில்கள்
>> சிம்பிள் ஈமெயில் மற்றும் பெரிய ஈமெயில்கள்
>> வீடியோ கான்பரென்சிங்
>> தொலைகாட்சி நிகழ்ச்சிகள் தடையின்றி பார்த்தல்

வேகம் :நூற்றி நற்பத்தி நன்கு கிலோபைட்ஸ் / நொடி முதல் இரண்டு மெகா பைட்ஸ் வரை இருக்கும் .

இதனை கொண்டு மூன்று நிமிடங்கள் ஓடும் ஆடியோ பைலை பதினோரு செகண்டுகளில் இருந்து ஒன்றரை நிமிடத்தில் டவுன்லோட் செய்துகொள்ள இயலும் .
இந்த தொழில் நுட்பம் நமக்கு தான் புதிது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் 2001 முதலே அங்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது மேலும் பெப்ரவரி 22 அன்று சென்னையில் மத்திய மந்திரி திரு அ.ராசா அவர்களால் அறிமுகபடுத்தபட்டு முதல்வர் அவர்களுடன் வீடியோ கான்பரென்சிங் முறையில் பேசப்பட்டது ,இனி நமது ஊர்களிலும் பொய் பேச இயலாவண்ணம் மூன்றாம் தலைமுறை அலைபேசிகளில் பேச முற்படுவோம் .(எங்கேயாவது பொய் சொன்னா அலைபேசியை அப்படியே திருப்பி இருப்பிடத்தை காட்ட சொல்லி விடுவார்களே ! )

Friday, November 6, 2009

மார்கெட்டிங் மாமணிகளும் மணிகளும் ...

இந்த மார்கெட்டிங் மக்கள் சொல்லக்கூடிய பொய்கள் சிலது மக்களுக்கு புரியாமலே இருந்ததால் கடவுளை போய் சந்திந்து தங்கள் குறைகளை சொன்னனர் .
மக்கள் :சாமீ இந்த துணிக்கு வெளுக்கற சோப்பு விக்கறவன் கூட asf டெக்னாலஜி ,xyz சொல்யுசன் ன்னு எதாவது ஒன்னு சொல்லறான் அவன் பொய்தான் சொல்றன்னு நினைக்கிறோம் அவங்க பொய்சொல்றத நீங்க தான் நிறுத்தனும் சாமீ?!
கடவுள் :நான் பார்த்துக்கிறேன்
உடனே கடவுள் மார்கெட்டிங் ஆசாமிகள் அனைவரயும் அழைத்து நடந்ததை சொல்லி இனிமே பொய்யே சொல்ல கூடாதுன்னு சொன்னார் , மார்கெட்டிங் ஆசாமிகள் எங்க பொழப்பு செருப்பா சிரிச்சிடும் சாமீ இன்னாங்க சாமி உடனே நாளைக்கு ஒருநாள் நீங்க பொய்யே பேசாம இருந்தா இந்த உலகத்துல நீங்க எதை கேட்டலும் தருவேன் ன்னு சொன்னாரு ,சரி ஒரு நாள் தானே ன்னு ஒத்துகிட்டாங்க கடவுள் சொன்னாரு நான் எனக்கு பக்கத்துல ஒரு மணிய கட்டிருப்பேன் நீங்க யாராவது பொய் சொன்னா இந்த மணி அடிக்கும் நீங்க தோத்துட்டிங்க ன்னு அர்த்தம் ன்னாரு
நம்ம ஆளுங்களும் சரின்னு நாளைக்கே போட்டிய வெச்சுகலாம்ன்னாங்க
அடுத்த நாள் கலை எழு மணி : போட்டி ஆரம்பிச்சாச்சு
எட்டு மணி :மணி அடிக்கவில்லை
பத்து மணி :மணி அடிக்கவில்லை
சாயங்காலம் 5 மணி : மணி அடிக்கவில்லை
சாயங்காலம் 7 மணி : மணி அடிக்கவில்லை

நம்ம ஆளுங்க வேலைக்கே போகலையே அப்புறம் எப்படி மணி அடிக்கும் ? மார்கெட்டுக்கு போன தானே பொய் பேசணும் ,நாங்கதான் போகலையே ?
கடவுள் மணிய பார்த்தாரு ,மேலயிருந்து பூமிய பார்த்தாரு ,ஒரு வேல இவங்க ஜெய்ச்சிடுவங்கலோன்னு பயத்தோட உக்காந்துட்டு இருந்தாரு

இரவு எட்டுமணி :மணி நிக்காம அடிக்க ஆரம்பிச்சது

கடவுளுக்கே ஆச்சர்யம் என்னடா இதுன்னு ?! கீழ பூமிய பார்த்தாரு

நம்ம ஆளுங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தாக தெரியுமா ?

எல்லோரும் அவங்க கம்பெனிக்கு டெய்லி ஆக்டிவிட்டி ரிப்போர்ட் அனுப்பிகிட்டு இருந்தாங்க
என்னன்னு :

நான் இத்தன மணிக்கு இன்னார பார்த்தேன் ,எல்லா பொருளையும் நாளைக்கு வித்துடலமுன்னு பொய்யா..
கடவுள் மக்கள்கிட்ட சொன்னாரு இவங்கள திருத்த முடியாதுன்னு !


படிச்ச உங்களுக்கு சீக்கிரம் காப்பி பண்ணும் ஒரு சின்ன சாரி tera சாப்ட்வேர்
TERA COPY

Saturday, October 24, 2009

தேசப்பிதா மகாத்மாவின் இறுதி நாள் போட்டோக்கள்









Wednesday, October 21, 2009

விண்டோஸ் 7 கொண்டாட்டம்

விண்டோஸ் 7 கொண்டாட்டத்தை முன்னிட்டு
கிழே உள்ள லிங்க் ஐ க்ளிக் செய்து ஒரு வருடம் செல்லுபடியாகும் கேஸ்பார்ஸ்கை அண்டிவைரஸ் ஐ இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் சலுகை 22/10/2009 தேதி மட்டுமே .
சுட்டி
நல்ல ஒரு ஆடியோ கம் வீடியோ பிளேயர் ஒன்று
சுட்டி
மேலே உள்ள பிளேயர் 3 gp முதல் எல்லா வகை பார்மெட்களையும் சப்போர்ட் செய்வது சிறப்பு .

Friday, October 9, 2009

நாமும் அரசியலும் ....


க்ளிக்கி பெரிதாக பார்க்கவும் ..

Wednesday, October 7, 2009

வங்கி கணக்கு புத்தகம் ...



நாம் எளியவகையில் வங்கி கணக்குகளை கையாள ஒரு எளிய மென்பொருள் acelite ,மேலும் இதில் அனைத்து வங்கிகளும் லிஸ்ட் அவுட் செய்யப்பட்டிருப்பது பெரிய ஆச்சர்யம் .மேலும் இதை கொண்டு நாம் விரும்பிய வகையில் கையாள நிறைய விசயங்கள் இந்த acemoneylite மென்பொருளில் கிடைக்கிறது .
சுட்டி

STD கோடு தெரிந்தால் ஊரை தெரிந்துகொள்ளசுட்டிமேலும் சென்னைவாசிகளுக்காக ஒரு தகவல் சுட்டி

Monday, October 5, 2009

மாங்குடி மாறிய கதை!

மாங்குடி மாறிய கதை!


ஜோதிமணிக்கு வயது பத்தொன்பது. அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். விரும்பி சேர்ந்த வேலை இது. அவருக்கு ஒரு கனவு இருந்தது. அடிப்படையில் இருந்து எல்லாமே மாறவேண்டும். மாணவர்களின் தலையெழுத்து மாற்றி எழுதப்பட வேண்டும். ஆசிரியப் பணியில் மட்டுமே இது சாத்தியம்.


மாணவர்கள் சோர்வின்றி கல்வி கற்கவேண்டும். இதற்கு வாகான வகுப்பறைகள் வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு தொலைக்காட்சி பெட்டி, சுவர்க் கடிகாரம், காலண்டர், குடிதண்ணீர் குழாய், முகம் பார்க்கும் கண்ணாடி, நகம் வெட்டும் நெயில் கட்டர், குப்பைக்கூடை, மாணவர்கள் தங்களுக்குள் கடிதப் பரிமாற்றம் செய்துகொள்ள அஞ்சல்பெட்டி, கம்ப்யூட்டர், சுகாதாரமான கழிப்பறை, விளையாட்டுப் பொருட்கள், பூங்கா... இப்படியெல்லாம் நீண்டுக்கொண்டே போனது ஜோதிமணியின் கனவு. மனது வைத்தால் இவை சாத்தியப்படக் கூடிய மிக எளிய விஷயங்களே என்று நம்பினார்.

கிட்ட்ததட்ட இருபது ஆண்டுகள் கழித்து கனவை நனவாக்க இவருக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைக்கிறது. இப்போது மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஜோதிமணிதான் தலைமை ஆசிரியர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து, பேராவூரணி செல்லும் சாலையில், சரியாக ஏழாவது கிலோ மீட்டரில், மெயின்ரோட்டில் இருந்து இடதுபுறம் திரும்பி ஒன்றரை கிலோ மீட்டர் நடந்தால் மாங்குடி.

எல்லா அரசுப்பள்ளிகளையும் போன்றுதான் மாங்குடி பள்ளியும் அப்போது இருந்தது. மாணவர்கள் கூட்டமாக, கத்திக்கொண்டே, ஒழுங்கில்லாமல் பள்ளிக்கு ஏனோதானோவென்று வந்து சென்றார்கள். தலைவாருவதில்லை. அழுக்கான ஒழுங்கற்ற உடை. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கிடையாது. கழிப்பறை கிடையாது. சீமை ஓடு வேய்ந்த சிறிய கட்டடங்கள். மாணவர்கள் கிட்டத்தட்ட இங்கே அடைக்கப்பட்டிருந்தார்கள் என்று சொல்லுவதே பொருத்தம்.
மாற்ற வேண்டும். எல்லாவற்றையும் மாற்றவேண்டும். எங்கிருந்து தொடங்குவது? முதலில் எதை மாற்றுவது? எதை செய்யவேண்டும் என்ற தெளிவு எல்லாருக்குமே இருக்கிறது. ஆனால் எந்த புள்ளியிலிருந்து தொடங்குவது என்பதில்தான் எல்லோருக்குமே குழப்பம். அந்தப் புள்ளி சீக்கிரமே ஜோதிமணிக்கு பிடிபட்டு விட்டது.

தலைவாராமல் பள்ளிக்கு வரும் மாணவிகளை சரிசெய்வதில் ஆரம்பித்தார். மாணவிகளை குறை சொல்லி என்ன பிரயோசனம்? பெற்றோர் தினமும் தலைவாரி அனுப்பினால் ஒழுங்காக வரப்போகிறார்கள். பெற்றோர்களை அழைத்துப் பேசினார். “பாருங்க இனிமே திங்கள் ரெட்டைசடைன்னா, செவ்வாய் ஒத்தசடை, புதன் மறுபடியும் இரட்டைசடை. இப்படி மாத்தி மாத்தி தலை பின்னிதான் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பணும்!” – இந்த ஐடியா நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. மாறி, மாறி ஒற்றைசடை, இரட்டைசடை என்பதால் தினமும் தலைசீவியாக வேண்டிய கட்டாயம்.

அடுத்ததாக யூனிபார்ம். அரசு அளிப்பது வருடத்திற்கு ஒரே ஒரு செட். ஒருநாள் அணிந்து வந்ததை மறுநாள் அணியமுடியாது என்பதால், மாணவர்கள் இஷ்டத்துக்கும் கலர் உடை அணிந்து வந்தார்கள். சிலரது உடை கிழிந்திருக்கும். சிலரது உடை அழுக்காக இருக்கும். மாணவர்களுக்குள்ளே இதனால் ஒவ்வொருவரின் பொருளாதார அளவுகோல் என்னவென்பது தெளிவாய் தெரிந்தது. வசதிகுறைந்த மாணவர்கள் தாழ்வுமனப்பான்மையில் மனம் குன்றினர்.

அவ்வருட தீபாவளிக்கு முன்பாக ஒட்டுமொத்தமாக பெற்றோரை அழைத்து கூட்டம் போட்டார் ஜோதிமணி. “தீபாவளிக்கு எல்லோரும் பசங்களுக்கு எப்பாடு பட்டாவது துணி எடுத்துடுவீங்கன்னு தெரியும். ஆனா இந்தமுறை ஒரே ஒரு கண்டிஷன். எல்லாரும் யூனிபார்ம் தான் எடுக்கணும். ஏற்கனவே ஒரு செட் இருக்கு. இன்னொரு செட் வந்துடிச்சின்னா பசங்க எல்லா நாளும் யூனிஃபார்மிலே ஸ்கூலுக்கு வரலாமில்லே?”

பெற்றோர்கள் யோசித்தார்கள். இவர் வேறுமாதிரியான ஆசிரியர். நம் பிள்ளைகளுக்கு ஏதோ நல்லது செய்ய நினைக்கிறார். நாம் ஏன் குறுக்கே நிற்கவேண்டும்? ஜோதிமணி என்ன சொன்னாலும் தலையாட்டத் தயார் ஆனார்கள். குழந்தைகள் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கம்பி மாதிரி. எப்படி வளைக்கிறோமோ அப்படி வளைகிறார்கள். ஜோதிமணி நல்லபடியாக வளைக்க ஆரம்பித்தார்.

இதெல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கதை...

இன்று, மாநில தொடக்கக் கல்வித்துறை 2007-08ஆம் ஆண்டின் சிறந்த பள்ளியாக மாங்குடி பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அளிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி சுகாதாரத்துக்கான யூனிசெஃப் அமைப்பின் பத்துநட்சத்திர விருதும் கூட. இன்னும் ஏராளமான அமைப்புகளின் விருதுகள் தலைமையாசிரியர் அறையை அலங்கரிக்கிறது. ‘கேம்பஸ்’ என்று சொல்லக்கூடிய ஒரு கல்லூரி வளாகத்துக்குள் இருக்கும் எல்லா வசதிகளுமே இந்த பள்ளிக்கு இப்போது உண்டு. முழுமையான சுற்றுச்சுவர், சுகாதாரமான கழிப்பிடம், இருச்சக்கர வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங், ஐந்தாம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு டெஸ்க், கம்ப்யூட்டர் லேப், நூலகம், அறிவியல் பரிசோதனைக் கூடம், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தனித்தனியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்க்குழாய், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி... இன்னும் என்னவெல்லாமோ...

வெறும் ஐந்தே ஆண்டுகளில் இதெல்லாம் எப்படி சாத்தியம்?

“இதெல்லாமே அரசு கொடுக்குறதை வெச்சிதாங்க பண்ணுறோம். எல்லா பள்ளிகளுக்கும் இதே வசதிகளை அரசு கொடுக்குது. அதை ஆசிரியர்கள் நாம எப்படி எடுத்து பயன்படுத்தறோம்கிறது முக்கியம்!” என்கிறார் ஜோதிமணி. நாற்பத்தின் மூன்று வயதான ஜோதிமணியின் பெயர் இவ்வருட நல்லாசிரியர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருப்பதாக சொல்கிறார்கள். முன்கூட்டிய வாழ்த்துகள் ஜோதிமணி சார்! (இது கட்டுரை எழுதும்போது இருந்த நிலை. கடந்த ஆசிரியர் தினத்தன்று ஜோதிமணிக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருக்கிறது)

இவர் சொல்லுவதைப் போல இந்த மாற்றங்கள் எல்லோராலேயுமே சாத்தியப்படுத்தக் கூடியதுதான். என்ன.. ஜோதிமணிக்கு இருந்தது போல கொஞ்சம் கனவும், நிறைய மனசும் முதலீடாக தேவைப்படும்!

லைவ் ஃப்ரம் மாங்குடி!

எட்டாம் வகுப்பு படிக்கும் பதிமூன்று வயது விஜயகாந்துக்கு தனியாக ஈமெயில் ஐடி இருக்கிறது. “விஜய்97@ரீடிஃப்மெயில்.காம். நோட் பண்ணிக்குங்க சார்” என்கிறான். இவனுக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் எல்லா மாணவர்களுக்குமே ஈமெயில் ஐடி இருக்கிறது. கம்ப்யூட்டர் தண்ணி பட்ட பாடு. தலைமையாசிரியர் ஜோதிமணியிடம் இணைய இணைப்புக்கான டேட்டாகார்ட் இருக்கிறது. குறிப்பாக மாணவர்கள் இங்கே இணையத்தில் பார்ப்பது தமிழ் விக்கிபீடியா.

“தமிழ் விக்கிபீடியா ஸ்டூடண்ஸுக்கு ரொம்ப உபயோகமா இருக்குங்க. பாடப்புத்தகத்துலே நாங்க பாடம் நடத்தி முடிச்சதும் அந்தப் பாடம் சம்பந்தமா விக்கிபீடியாவில் அவங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா பார்த்து தெரிஞ்சுக்குறாங்க. ஆசிரியர்களோட வேலைப்பளு இதனால குறையுது”

எல்லா மாணவர்களுக்கும் ஈ-கலப்பை மென்பொருள் பயன்படுத்தி தமிழில் டைப் அடிக்கத் தெரிகிறது. பவர்பாயிண்டில் வேகமாக இயங்குகிறார்கள். பேஜ்மேக்கரில் டிசைன் செய்கிறார்கள். பாடம் முடிந்ததும் பவர் பாயிண்டில் குழுவாக அசைன்மெண்ட் செய்யவேண்டும். ஒவ்வொரு குழுவிலும் மூன்று அல்லது நான்கு மாணவர்கள் இருக்கிறார்கள். வகுப்பு ஒன்றுக்கு ஆறு, ஏழு குழுக்கள் இருக்கின்றன. வாரத்துக்கு ஒருமுறை தாங்கள் செய்த அசைண்மெண்ட்களை மற்ற குழுவினர் மத்தியில் ப்ரசண்டேஷன் செய்யவேண்டும். இதற்காக எல்.சி.டி. புரொஜெக்டர் ஒன்றும், பெரிய திரை ஒன்றும் வாங்கி வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் பொதுவாக கல்லூரிகளில் இருக்கும் நடைமுறை.

குழு அசைண்மெண்ட் மட்டுமல்லாது ஒவ்வொரு மாணவனுக்கும் தனி அசைண்மெண்ட் உண்டு. முழுநீள வெள்ளைத்தாளில் ஆசிரியர் மூலமாக தான் கற்ற பாடத்தை எவ்வாறு உள்வாங்கிக் கொண்டோம் என்பதை எழுதியாக வேண்டும். ஒவ்வொரு அசைண்மெண்டும் தனித்தனி ஃபைல்களில் ஆவணப்படுத்தப் படுகிறது. தேர்வு நெருங்கும் நேரத்தில் இந்த ஃபைலை மாணவன் எடுத்துப் பார்த்து தன்னுடைய முன்னேற்றத்தை சுயமதிப்பீடு செய்துக் கொள்கிறான்.

நூலகம் இங்கே சிறப்பாக இயங்குகிறது. பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் போன்ற விலையுயர்ந்த நூல்களும் உண்டு. மாணவர்கள் ஓய்வுநேரத்தில் தங்களுக்கு வேண்டிய நூல்களை எடுத்துப் படித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வகுப்பறையிலும் சிறியளவிலான நூலகம் தனியாக அமைந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கையாள நிறைய பேர் தேவைப்படுகிறார்கள். ஆனால் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை எட்டு மட்டுமே? எப்படி சமாளிக்கிறார்கள்?
“எல்லாத்தையும் பசங்களே பண்ணிடுறானுங்க சார். பள்ளியிலிருந்து எழுதப்படும் கடிதங்களில் ஆரம்பிச்சு, பள்ளியோட மாணவர்கள் வருகைப் பதிவேடுன்னு எல்லாத்தையும் மாணவர்களே கையாளுறாங்க. இங்கே படிக்கிற 241 மாணவர்களில் 200 பேர் ஏதோ ஒரு குழுவில் கட்டாயம் இருப்பாங்க. ஒவ்வொரு வேலைக்கும் ஒரு குழு.

உதாரணத்துக்கு குடிநீர் கண்காணிப்புக் குழு, சுகாதார கண்காணிப்புக் குழு, நூலகக் கண்காணிப்புக் குழுன்னு ஏராளமான குழுக்களா வேலைகளை பிரிச்சிக் கொடுத்திருக்கோம். ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்குறதாலே, அந்தப் பொறுப்புக்கான கடமைகளை, நாங்க சொல்லாம அவங்களே எடுத்துப் பண்ணிடுறாங்க. ஒண்ணு, ரெண்டு முறை தவறு வரும். சின்னக் குழந்தைகள்தானே? ஆனா அதை நாங்க பெரிசுப் படுத்திக்குறது இல்லை. ஆனா இதனால ஒவ்வொரு மாணவனுக்கும் தலைமைப் பண்பு இயல்பாகவே வந்துடுது” என்கிறார் தலைமை ஆசிரியர் ஜோதிமணி.

தொண்ணூற்றி ஐந்தாம் ஆண்டு இங்கிருந்து போன முன்னாள் மாணவி ஒருவர் டி.சி. கேட்டு வருகிறார். ஒரு விண்ணப்பம் எழுதித்தரச் சொல்லி தலைமையாசிரியர் கேட்க, அவர் முழிக்கிறார். உடனே ஒரு மாணவனை அழைத்து, “தம்பி. இவங்களுக்கு ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடு” என்கிறார். வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒரு வெள்ளைத்தாளில் அழகாக விண்ணப்பம் எழுதிக் கொடுக்கிறான் மாணவன்.

“வெள்ளைத்தாளை கையாளத் தெரிஞ்சுடிச்சின்னா போதும். ஒருத்தன் எதை வேணும்னாலும் சாதிக்கலாம். இங்கே இதைத்தான் நாங்க கற்றுத் தருகிறோம். நாளைக்கு இவங்க வளர்ந்து, அலுவலகங்களில் வேலை பார்க்கும்போது எந்த்த் தயக்கமும் இல்லாம வேலை பார்ப்பாங்க. ஏன்னா எங்க அலுவலக வேலைகளையும் அவர்களே பகிர்ந்துக்கிட்டு அனுபவப் பட்டுடுறாங்க! விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுறது, தேர்வு மதிப்பெண் அட்டைகளை தயார் செய்யுறதுன்னு கம்ப்யூட்டர்லேயே பசங்க எல்லா வேலையையும் முடிச்சிட்டு அழகா பிரிண்ட் எடுத்துக் கொடுத்துடுவாங்க”

பள்ளிக்குள்ளேயே ஒரு போஸ்ட் ஆபிஸ் நடைபெறுவது சுவாரஸ்யமானது. ஒரு போஸ்ட் மாஸ்டர், இரண்டு போஸ்ட் மேன்கள் உண்டு. இவர்களும் மாணவர்கள்தான். இவர்கள் அஞ்சல்குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள். நாலாம் வகுப்பு படிக்கும் மாணவன், எட்டாம் வகுப்பு படிக்கும் தன் அண்ணனுக்கு கடிதம் எழுதி, தன் வகுப்பில் இருக்கும் போஸ்ட் பாக்ஸில் போட்டுவிடலாம். அது போஸ்ட் மேன் மூலமாக சேகரிக்கப்பட்டு, போஸ்ட் மாஸ்டரால் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை இடப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவனுக்கு போய்ச்சேர்ந்து விடுகிறது. ஆசிரியர்களையும் மாணவர்கள் தபால் மூலமாகவே தொடர்பு கொள்கிறார்கள். சாக்பீஸ் தீர்ந்துவிட்டது, வாங்கவேண்டுமென்றால் கரும்பலகைகள் கண்காணிப்புக் குழு, தலைமையாசிரியருக்கு ஒரு கடிதம் மூலமாக தன் தேவையை அனுப்பி வைக்கிறது. இந்த உள்பரிமாற்ற விஷயங்கள்’கடிதம் எழுதுவது’ குறித்த அச்சம் ஏதுமின்றி மாணவர்களை வளர்த்தெடுக்கும் என்கிறார்கள்.

சிறுசேமிப்புத் திட்டமும் உண்டு. மாணவர்கள் சேமித்துத் தரும் பணத்தை ‘ரிகரிங் டெபாசிட்’ ஆக முதலீடு செய்து, அவர்கள் பள்ளியை முடித்துச் செல்லும்போது மொத்தமாக தருகிறார்கள். இது அவர்களது மேல்கல்வித் தேவைகளுக்கு உதவுகிறது.
இந்தப் பள்ளிக்கென்றே தனிச்சின்னம் (Emblem) உருவாக்கியிருக்கிறார்கள். தினசரி காலை தேசியக்கொடியேற்றம் மற்றும் இறைவணக்கக் கூட்டம் நடக்கிறது. மாணவர்கள் சாப்பிடச் சென்றாலும் சரி, இடைவேளையில் கழிப்பறைக்குச் சென்றாலும் சரி. வரிசையாகவே செல்கிறார்கள். வரிசையாகவே வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே இவர்களது கையெழுத்து மெச்சப்படக் கூடியதாக இருக்கிறது. இதற்குப் பின்னாலும் தலைமையாசிரியர் இருக்கிறார். பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கிலப் பயிற்சி நிறுவனத்தில் அவர் எடுத்துக் கொண்ட பயிற்சியின் விளைவாகவே, மாணவர்களுக்கு சிறந்த கையெழுத்துத் திறனை அளிக்க முடிகிறது. எல்லா மாணவர்களின் கையெழுத்தும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருக்கிறது. ஒரே மாதிரியான மார்ஜின் விட்டு எழுதுகிறார்கள்.

ஓர் ஆண்டுக்கு மொத்தமாகவே மூன்று மூன்று நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே மாணவர்கள் வாங்க வேண்டியிருக்கிறது. இதற்கு மேல் நோட்டுப் புத்தகங்களில் எழுதியாகவேண்டிய அவசியம் இல்லவேயில்லை என்கிறார்கள் ஆசிரியர்கள். அசைன்மெண்டை வெள்ளை பாண்ட் பேப்பரில் எழுதுகிறார்கள். நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வெள்ளைத்தாள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பேப்பர் லிட் (TNPL) நிறுவனத்தில் வாங்குகிறார்கள்.

மதிய உணவு சாப்பிட வசதியாக கடப்பா கற்களால் அமைக்கப்பட்ட மேடைகள் உண்டு. ஒரே நேரத்தில் நூறு குழந்தைகள் இங்கு வரிசையாக அமர்ந்து சாப்பிடலாம். திறந்தவெளி கலையரங்கம் உண்டு. மூலிகைச்செடிகள் வளர்க்கப்பட்ட பூங்காவில் சறுக்குமரம், ஊஞ்சல் என்று குழந்தைகள் விளையாட இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் கூடம், தொழிற்கூடம் எல்லாம் கூட உண்டு. சென்னையில் இயங்கும் தமிழ்நாடு அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் பங்கு இப்பள்ளியின் அடிப்படைக் கட்டுமானத்தில் உண்டு என்கிறார்கள்.

ஒவ்வொரு வகுப்பறையிலும் டிவி இருக்கிறது. நூலக அறையில் சிடிக்களில் ஒளிபரப்பப்படும் படங்கள் எல்லா வகுப்பறைகளிலும் மாணவர்கள் பார்க்க இயலுகிறது. பாடம் முடிந்துவிட்டால் மாணவர்கள் டிவி பார்க்கலாம். சினிமாப் படங்களும் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதி, காமராஜர் என்று தலைவர்களின் வரலாற்றுப் பட சிடிகளை நிறைய சேமித்து வைத்திருக்கிறார்கள். மதிய வேளையின் போது மாணவர்கள் சத்தம் போடுவதை நிறுத்த ஒலிபெருக்கியில் தேசபக்திப் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள்.

ஒரு வகுப்பில் கூட ‘பிரம்பு’ என்ற வஸ்துவையே பார்க்கமுடியவில்லை என்பது மற்றொரு ஆச்சரியம். ஆசிரியர்கள் முகத்தில் எப்போதும் கனிவு. “நாங்க சத்தம் போடுற மாதிரி மாணவர்கள் நடந்துக்கறதே இல்லை. எல்லாமே ஒரே ஒழுங்கில் செயல்படுறாங்க. இங்கே லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட், ஆவரேஸ் ஸ்டூடண்ட்ஸெல்லாம் இல்லவேயில்லை. ஒவ்வொரு மாசமும் அவங்க அவங்க இடத்தை மாத்துவோம். எல்லோரும் ஒரே மாதிரி நல்லாவே படிக்குறாங்க. இங்க இருந்து போன பசங்க எஸ்.எஸ்.எல்.சியில் நானூறுக்கு மேல மார்க் வாங்குறாங்கன்னு கேள்விப்படுறப்போ மகிழ்ச்சியா இருக்கு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் செயல்வழி கற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் கல்விமுறை மவுனமான கல்விப்புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது என்கிறார் தலைமையாசிரியர். இதன் பலன்கள் இன்னும் சில வருடங்களில் தெரியும். இப்போதே நம் கல்விமுறையை பார்த்து, இதே முறையை பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் அமல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாங்குடிப் பள்ளி இந்தியாவுக்கே ஒரு மாதிரி பள்ளி. தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளும் மாங்குடிப் பள்ளியாய் மாறிவிட்டால் கல்வி வளர்ச்சியில் உலகிலேயே முதல்மாநிலமாக தமிழகம் திகழும் என்பது உறுதி.

நன்றி : யுவகிருஷ்ணா
புதிய தலைமுறை

Monday, September 28, 2009

ஆபீஸ் வேலையை காப்பற்றிக்கொள்ள ?!

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி ? 1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ , கோடையோ (code) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள் .

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும் . அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும் . ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும் .
3.
கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ - க்களை உபயோகித்தால் பிஸியாக , வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும் .
4.
அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே நகத்தையும் கடித்து வையுங்கள்.
5.
சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும் .
6.
அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே " எஸ் ...." என்றோ அல்லது " சக்சஸ் " என்றோ சொல்லுங்கள் .
7.
எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள் .
8.
கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள் , கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள் .
9.
உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் திறந்தே வையுங்கள் . அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும் , நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள் .
10.
எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ , விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள் .
11.
ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய் , ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள் , பிறகு பிஸியாக இருந்தேன் , ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம் .
12.
சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள் . கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள் . மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள் .
13.
உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ , பைல்களையோ திறந்து வையுங்கள் . அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது , குளோஸ் செய்வது , மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள் .
14.
செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள் . சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள் .
15.
கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் ( உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும் ) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள் .
16.
முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள் . அப்படியே ஆற விட்டுவிடுங்கள். மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம் . கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என ( மற்றவர் காதில் ) விழும்படி சொல்லுங்கள் .
17. (
வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால் ) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டிகொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள் . ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம் .
18.
இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள் . நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள் ?



வேலை நேரத்தில் ஒழுங்காக வேலை செய்யாமல் வலைபூக்களில் எழுதுவோர் சங்கத்தலைவர்






Saturday, September 26, 2009

சரக்குகள் தீர்த்து போனால்..

இணையத்தில் உலவுவதை பொழுது போக்காக வைத்திருந்தவன் நான் ,மேலும் எதோ ஒரு விசையால் உந்தப்பட்டு எனக்கு கிடைக்கின்ற தகவல்களை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தும் நோக்கில் ப்ளாக்கில் எழுத ஆரம்பித்தேன் ,நான் வசிக்க நேர்ந்த விஷயங்கள் சம்பவங்களை சுவையாக எழுத எண்ணம் அனால் சினிமா சம்பத்தப்பட்ட பாடல் மற்றும் படங்களை டவுன்லோட் செய்யும் சுட்டிகளை கொண்ட வலைபூக்களே அதிகம் ஹிட் அடிப்பவைகளாக உள்ளன ?!
நம்மிடம் சொந்த சரக்குகள் தீர்ந்து போகும்போதுதான் எதுவுமே எழுதாமல் இப்படிபட்ட லிங்க்க்குகளை கொடுக்க தோன்றும் ,நான் pkp,tamilnenjam,idlyvadai,சுதந்திர மென்பொருட்கள்,gouthaminfotech ,மேலும் பலரின் இடுகைகளை கண்டு வியந்து பழைய இடுகைகளையும் ஒன்று விடாமல் படித்து வருகிறேன் ,இணையத்தில் இது ஒரு நல்ல முயற்சியும் கூட ..வளரட்டும் இவர்தம் தமிழ் சேவை ...சரக்குகள் தீர்ந்தோர் பெட்டியை கட்டுவது நல்லது .அடுத்தோர் கோவணத்தை உருவி அங்கவஸ்திரம் போடத்தான் வேண்டுமா ?சிந்திப்போம் மேலும் எனது இன்றைய செய்தி ஓன்று இணைப்பில் உள்ள audacity மென்பொருளை கொண்டு நிறைய சவுண்ட் எடிட்டிங் வேலைகளை செய்ய இயலும்
சுட்டி

Tuesday, September 22, 2009

காதலிகளும் அவர்களின் அப்பாக்களும் !


சரியாக தெரியாயவிடில் க்ளிக்கி பெரிதாக பார்க்கவும் ...
உரிமை : மெயிலில் வந்தது எழுதியவற்கே ?!

Saturday, September 19, 2009

ஆதி முதல் அந்தம் வரை ...

நான் கிராமபுறங்களில் படித்துவிட்டு வேலைக்கு வந்தவன் ,நாங்கள் படிக்கும்போது 6 ஆம் வகுப்பிலிருந்து 7 ஆம் வகுப்பிற்கு போகும்போது பழைய பாடபுத்தக்கங்களை பாதிவிலைக்கு கொடுத்து விட்டு (பிட் அடித்தது போக மீதிஉள்ளதைத்தான் ) 7 ஆம் வகுப்பு புத்தங்களை வங்கி கொள்ளுவோம்ஏன்னென்றால் புதிய புத்தகங்கள் பள்ளி திறந்தவுடன் தான் கடைகளில்கிடைக்கும் ( . முன்னாடியே படிக்க என்ன செய்வது?!) மேலும் நண்பர் ஒருவரின் தங்கை தற்போது B Ed., படித்து கொண்டிருக்கிறார் அவருக்காக சில ஸ்டேட் போர்டு புத்தங்களை கடைகளில் கேட்ட போது புத்தகங்கள் இப்போதுகடைகளுக்கு வருவதில்லை எனவும் அந்தந்த பள்ளிகளில் மட்டுமே கிடைக்கும்எனவும் கூறக்கேட்டேன் ,மேலும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் அந்தபுத்தகங்களை பள்ளியில் ஒப்படைத்து விட்டே அடுத்த வகுப்பிற்கு செல்லமுடியும், புத்தங்கங்கள் வெளியே கிடைக்கும் வாய்ப்புகள் குறைவே
அனால் இணையத்தில் இவை இலவசமாக டவுன்லோட் செய்ய கிடைக்கின்றன.

ஸ்டேட் போர்டு புத்தகங்கள்(தமிழ் மற்றும் அங்கில வழி இரண்டும் உண்டு )

NCERT புத்தங்கங்கள்


Wednesday, September 16, 2009

மலர்வளையம்

எழுத்தாளரும் , வானொலிகளில் இன்று ஒரு தகவல் தரும் நல்ல ஒரு சன்றோருமான தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் காலமானார் ,வாசகர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள் அவர்களின் குடும்பத்தார்க்கு தெரிவித்து கொள்கிறேன் .மேலும் அவரின் இன்று ஒரு தகவல் என்றும் நமக்கு நல்லதையே புகட்டிக்கொண்டிருக்கும் .
இன்று ஒரு தகவல்1

இன்று ஒரு தகவல்2


இன்று ஒரு தகவல்3

இன்று ஒரு தகவல்4

இன்று ஒரு தகவல்5

இன்று ஒரு தகவல்6

Monday, September 14, 2009

நம்ம போட்டோ தேம்ஸ் நதிக்கரையில் ...

இன்று ஒரு சின்ன தகவல் மற்றும் நாலு -புத்தகங்கள் உங்களுக்கு !!


போட்டோபண்யா(நம்ம தமிழ் மொழி பெயர்ப்பு ) என்ற இணை தளத்தில் நம்முடைய புகைபடங்களை ஏற்றி நமக்கு நாமே போஸ்டர் அடிக்கலாம் ,சுவற்றில் பெரிய ப்ளெக்ஸ் வைத்து போசெய்யலாம் ,நம்முடைய படத்தை டாலர் நோட்டுகளில் அடித்து மகிழலாம்

நீங்களும் தன் டாலர் நோட்டுல போட்டோவ அடிச்சு பாருங்களே !! just for fun
கணக்கு புதிர் புத்தகங்கள் சிலது
1001 maths problems
maths Puzzles
Puzzles to puzzle u


Thursday, September 10, 2009

சாப்ட்வேர் கம்பெனி வேலையும் அன்னதான சாப்பாடும் !


"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு,பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?.அப்படி என்னதான்
வேலை பார்பீங்க?" - நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.நானும்
விவரிக்க ஆரம்பிதேன்.



"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.அதே மாதிரி எல்லா
வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.இதுக்காக எவ்வளவு பணம்
வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாபிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல,இங்கிலாந்து-ல இருக்குற Bank,இல்ல எதாவது
கம்பெனி "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.எனக்கு இத செய்து கொடுங்க
கேப்பாங்க.இவங்கள நாங்க "Client" nu சொல்லுவோம்."

"சரி"

"இந்த மாதிரி Client-a மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச
பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம்.இவங்க பேரு "Sales
Consultants,Pre-Sales Consultants....".இவங்க போய் Client கிட்ட
பேச்சுவார்த்தை நடத்துவாங்க.காசு கொடுகுறவன் சும்மாவா
கொடுப்பான்?.ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான்.உங்களால இத பண்ண முடியுமா? அத
பண்ண முடியுமான்னு?.அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும் "முடியும்"னு
பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA,MS nu பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க"

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA
படிக்கணும்?" - அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுதுடுவானா?"

"அது எப்படி?இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனி-ளையும் இருப்பாங்க.500
நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம்,50 நாள்ல முடிச்சு
தரோம்னு பேரம் பேசுவாங்க.இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு
ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்?
ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும்.50 நாள்னு
சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன
வேணும்னு அவனுக்கும் தெரியாது,என்ன செய்யனும்னு நமக்கும்
தெரியாது.இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க
deliver பண்ணுவோம்.அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,எங்களுக்கு
இது வேணும்,அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்."

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR
raise பண்ணுவோம்னு" சொல்லுவோம்.

"CR-na? "

"Change Request.இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை
பார்த்துட்டோம்.இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு
சொல்லுவோம்.இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."அப்பா-வின்
முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்து கிட்டு தான் ஆகணும்.முடி வெட்ட போய்ட்டு,பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.இதுல project managernu ஒருத்தர்
இருப்பாரு.இவரது தான் பெரிய தலை.ப்ராஜெக்ட்
success-aanalum,failure-aanalum இவரு தான் பொறுப்பு"

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு"

"அதான் கிடையாது.இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது"

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" - அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம்.எப்போ எவன்
குழி பறிப்பானு டென்ஷன் ஆகி tired ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை"

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட
போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.நாங்க என்ன சொன்னாலும்
தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான்
இவரோட வேலை"

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி"

"இவருக்கு கீழ Tech Lead,Module Lead,Developer,Testernu நிறைய அடி
பொடிங்க இருப்பாங்க"

"இத்தனை பேரு இருந்து,எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா,வேலை easya முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே?.நான் கடைசியா சொன்னேன் பாருங்க,Developer,Tester
னு,அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க.அதுலையும் இந்த
Developer வேலைக்கு,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட
மானம்,மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி,நெத்தில திருநீறு பூசி
அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க"

"அந்த Testernu எதோ சொன்னியே?அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த Developer பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.புடிக்காத
மருமக கை பட்டா குத்தம்,கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?.புதுசா தான்
இருக்கு.சரி இவங்களாவது வேலை செய்யுராங்கள.சொன்ன தேதிக்கு வேலையமுடிச்சு
கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி?.சொன்ன தேதிக்கு projecta முடிச்சி கொடுத்தா அந்த குற்ற
உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும்.நிறைய பேரு
அந்த அவமானத்திற்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"Client சும்மாவா விடுவான்?.ஏன் late-nu கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான்.இது வரைக்கும் team குள்ளையே காலை வாரி
விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார
ஆரம்பிப்போம்"

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.அன்னைக்கு Team
Meetingla வச்சி நீ இருமின,உன்னோட hair style எனக்கு புடிகலை."இப்படி
எதாவது சொல்லி அவன குழப்புவோம்.அவனும் சரி சனியன எடுத்து தோள்ல
போட்டாச்சு,இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு
வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா,நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கனும்."

"அப்புறம்?"

"Project முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற
மாதிரியும்,அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க
ஆரம்பிப்போம்."

"அப்புறம்?" "அவனே பயந்து போய் "எங்கள தனியா விட்டுடாதீங்க.உங்க டீம்-ல
ஒரு ஒன்னு,ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது
பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."இதுக்கு பேரு "Maintanence and
Support".இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"Project அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு
வரது மாதிரி.தாலி கட்டினா மட்டும் போது,வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு
பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் Clientuku
புரியஆரம்பிக்கும்."எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

நன்றி -இட்லி வடையார்

என்னைப்பற்றி

My photo
தாராபுரம், திருப்பூர் /தமிழ்நாடு, India